››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி இன்று தாமரைத் தடாக அரங்கில்

'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி இன்று தாமரைத் தடாக அரங்கில

[2019/09/14]

'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சியானது தாமரைத் தடாக அரங்கில் இன்று (செப்டம்பர், 14) மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இவ் இசை நிகழ்ச்சியில் உள்ளூர் இசை துறையில் பிரசித்திபெற்ற கலைஞர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இவ் இசை நிகழ்ச்சியை புகழ்பெற்ற பாடகர்களும், கலைத்துறை பிரபலங்களுமான டி.எம். ஜெயரத்ன, விக்டர் ரத்நாயக, கீர்த்தி பாஸ்கல், சுனில் எதிரிசிங்க, சுஜாதா அத்தநாயக்க, பாத்தியா ஜெயகொடி, சந்தூஷ் வீரமான், தீபிகா பிரியதர்ஷினி, தனபால உடவத்த, உமரியா சின்கவங்ஷ, லதா வல்பொல, தனுஷா திசாநாயக்க மற்றும் சங்க தினேத் ஆகியோரைக் கொண்டு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி திட்டமானது முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு தேவையான நிதியினை திரட்டும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ஏற்பாடுசெய்திருந்தது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட அவர்களின் கருத்திதடத்தின் கீழ் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க உள்ளார்.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்