››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் மகா சங்க உறுப்பினர் வண. அதுரலிய ரத்தன தேரர் அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் மகா சங்க உறுப்பினர் வண. அதுரலிய ரத்தன தேரர் அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/09/16]

போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அங்கத்தவர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், இவ் அங்கத்தவ குழுவினர் மகா சங்க உறுப்பினர் வண. அதுரலிய ரத்தன தேரர் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டம்பர், 16) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின்போது, 55 வயது வரை பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு மரணமடைந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் நபர்களுக்கு வழக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்குதல் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை அவரது வாழ்நாள் முழுவதும் வழங்குதல் தொடர்பாக இறுதி துணைக்குழுவினரின் அறிக்கை நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்காக இன்று அமைச்சரவை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

 

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்