››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் செயலாளருடன் சந்திப்பு

அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் செயலாளருடன் சந்திப்பு

[2019/09/18]

அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டம்பர், 18) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளரை, தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பிரிவின் முதலாவது உதவி செயலாளர், வைத்திய கலாநிதி. லச்லன் ஸ்ட்ராஹன், இலங்கை மற்றும் மாலைதீவு பிரிவின் பிரதிப்பணிப்பாளர். திருமதி தனந்தி கலபிட்டகே, இரண்டாவது செயலாளர், திருமதி சுசான் ஜோன்ஸ் ஆகிய தூதுக்குழுவினர் இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி தலைமையில் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இச்சந்திப்பின் போது இடம்பெற்ற சினேகபூர்வமான கலந்துரையாடலில் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வின்போது தேசிய புலனாய்வுத்துறை பிரதானியும் கலந்துகொண்டார்.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்