››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் மாணவர்களுக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

யாழ் மாணவர்களுக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

[2019/09/23]

அண்மையில் (செப்டம்பர், 21) யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது தகுதிவாய்ந்த மாணவர்கள் குழுவினருக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வன்பளிப்பு யாழ் தீபகற்பத்தில் மிகுந்த தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு கல்வி நடவடிக்களுக்காக வரும் மாணவர்ளின் போக்குவரத்தினை இலகு படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பாதுகாப்பு படை தளபதி, மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

புதிய துவிச்சக்கர வண்டிகளுக்கு மேலதிகமாக, பொருளாதார மதிப்புள்ள மரக்கன்றுகளும் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டன. இப்பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மரம் நடுகை நிகழ்வினை முன்னிட்டு இவ்விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை, கடந்த வருடம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் யாழ் பாதுகாப்பு படையினரினால் இங்குள்ள தகுதியான மாணவர்களுக்கு சுமார் 400 க்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகளை விநியோகித்துள்ளனர்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்