››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கு கடற்படையினர் உதவிக்கரம்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கு கடற்படையினர் உதவிக்கரம்

[2019/09/25]

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதிவாகியுள்ள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு கடற்படையினரால் உதவிகளை வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கேற்ப காலி மாவட்டத்தில் தாவலாம, பத்தேகம, உடுகம, பொத்தல, நாகொட மற்றும் இமாதுவ பிரதேசங்களிலும் களுத்தறை மாவட்டத்தில் புலத்சிங்கள, வல்லலவிட்ட மற்றும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரெஸ்ஸ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கை கடற்படை யின் துரித மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு (4RU) மற்றும் சுழியோடிகள் பிரிவு ஆகிய நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 18 பேர் உட்பட 417 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கடற்படையினர் அனுப்பியுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலையை எந்நேரமும் எதிர்கொள்ளும் வகையில் மேலதிக கடற்படை வீரர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்