››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

படை வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசியப் படையின் உறுப்பினர்கள் மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருடன் சந்திப்பு

படை வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசியப் படையின் உறுப்பினர்கள் மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருடன் சந்திப்பு

[2019/09/25]

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வண. அதுரேலிய ரத்ன தேரர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு விடயங்களுக்கான மேலதிக செயலாளர் திரு. அனுருத்த விஜேகோன் அவர்களை சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை (செப்டம்பர் 24) இடம்பெற்ற இச்சந்திப்பில், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு விடயங்களுக்கான மேலதிக செயலாளர் திரு. அனுருத்த விஜேகோன் அவர்கள், முப்படை ,பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை வீரர்களுக்கு அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த படைவீரர்கள் ஆகியோருக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்கள் பெற்ற கடைசி சம்பளத்திற்கு சமமான ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கேற்ப, அனைத்து அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு வழங்கப்படும் பிற கொடுப்பனவுகளுக்கு பதிலாக, அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வு நேரத்தில் பெறப்பட்ட அனைத்து கொடுப்பனவுகள் உள்ளிட்ட மாத சம்பளம் வழங்கப்படும். மேற்படி விடயங்கள் அடங்கிய ஒப்புதல் கடிதத்தின் நகல் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு விடயங்களுக்கான மேலதிக செயலாளரினால் வண. அதுரேலிய ரத்ன தேரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இராணுவ பேச்சாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சினது ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து, பதில் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் அஜித் திசாநாயக்க, கொழும்பு மத்திய பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரத்நாயக்க மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்