››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

President Past News - 2019

ஊடக அறிவித்தல் - 2019


செப்பு தொழிற்சாலை ஊழியர்களிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் மேலதிக விசாரணை தொடர்கிறது

[2019/05/28]

வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒன்பது ஊழியர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரிகள் மரபணுப் பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டனர்

[2019/05/22]

மரபணுக்கள் தொடர்பான பரிசோதனை அறிக்கை, உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளினது மரபணுக்களுடன் ஒத்துப்போயுள்ளதக அரச இரசாயனப் பகுப்பாயவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச முயற்சி

[2019/05/13]

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸாரும் முப்படையினரும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டுவருகின்றனர். எனவே பொது மக்கள் வீணாக எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை.

 

வத்தளை, ஹூனுபிட்டிய பிரதேசத்தின் வீதிச் சோதனைச் சாவடியில் கடற்படையின் சமிக்ஞையை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோம் மேற்கொண்டுள்ளனர்.

[2019/05/12]

சந்தேகத்திற்கிடமான வாகம் ஒன்றின் நடமாட்டம் தொடர்பாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சோதனை மேற்கொள்ளும் பொருட்டு வத்தளை, புகையிரத கடவைக்கு அருகாமையில் வத்தளை, அவரியவத்த மற்றும் ஹூனுபிட்டிய வீதி ஆகியவற்றினை உள்ளடக்கியதாக மூன்று வீதிச் சோதனைச் சாவடிகளை அமைந்துள்ளனர்.

 

மேலும் சந்தேக நபர்கள் கைது

[2019/05/11]

பொலிஸார் காத்தான்குடியில் சந்தேக நபர் ஒருவரை வியாழக்கிழமை (மே, 9) இரவு கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட சஹ்ரான் என்பவருடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்ததுடன், அவருடன் பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன.

 

கட்டுநாயக்க விமானநிலையத்திற்கான போக்குவரத்து கெடுபிடிகள் இலகுவாக்கம்

[2019/05/10]

உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தையடுத்து விமான நிலையத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பல்வேறு மாற்று நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

 

ஊடக அறிவித்தல்

[2019/05/07]

பாதுகாப்பு துறையினரால் வீடுகள் மற்றும் பொது இடங்கள் சோதனையிடப்படும்போது அதனை ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

 

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

[2019/05/06]

கடந்த 48 மணித்தியாலங்களின்போது, படையினர் அவர்களின் முழுக்கவனத்தையும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கின்றது – பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

[2019/05/03]

உலகளாவிய பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் மிக முக்கியமானதென சுட்டிக்காட்டிய ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இருப்பதாக தெரிவித்தார். .

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

[2019/05/03]

பொது மக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் பொய்யான தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

 

சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொலிஸாரினால் அடக்கம்

[2019/05/03]

சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான மரண பரிசோதனை நிறைவு பெற்றதையடுத்து அவற்றினை அடக்கம் செய்யும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.

 

புனித அந்தோனியார் தேவாலய புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

[2019/04/30]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் காரணமாக சேதமடைந்த புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

பிரதான சந்தேக நபர்கள் கைது

[2019/04/30]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 44 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர். அதில் 07 பேர் பெண்கள். அதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 15 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

[2019/04/30]

இலங்கை இராணுவம் அதன் ஏழு அமைப்புகளினூடாக தீவிரவாதிகளை கைது செய்யும் வகையில் நாடு முழுவதிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளை தலமையகம் கொழும்பில் திறந்து வைப்பு

[2019/04/29]

இராணுவ தலைமையகத்தினால் இம் மாதம் (29) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரை உள்ளடக்கி மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் வரையிலான பிரதேசங்களை உள்ளடக்கி இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளை தலைமையகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) இயக்கங்களை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை…

[2019/04/27]

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் – National Thawheed Jammath (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் – Jamathei Millathu Ibraheem zeilani (JMI) ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

துப்பாக்கி சூடு எதிர்த் தாக்குதலில் இரண்டு துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டனர்

[2019/04/27]

நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் உட்படஇராணுவ படையினரால் (26)ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர் சுற்றிவலைப்பு தேடுதலின் பிரகாரம் பல தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றுவறுவதுடன் நடு இரவு நேரத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

நாடுபூரகவும் இராணுவ படையினரால் தேடுதல் நடவடிக்கைகள்

[2019/04/27]

அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆயுதப்படைகளுக்கு விடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கமைய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர்கள் பொலிஸாரினது ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் நாடுபூரகவும் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

 

பொதுமன்னிப்பு வழங்களின் நிமித்தம் இராணுவ சேவையில் இருந்து விலகும் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

[2019/04/27]

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதி அவர்களின் பரிந்துரைக்கமைய முப்படைகளின் முனைஞரும் பிரதானியும் மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இராணுவ சேவையில் இருந்து விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலவரையரை 2019 ஏப்ரல் 22 தொடக்கம் மே மாதம் 10 ஆம் திகதி வரை நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கியபின்னர் இதுவரைக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் விலகிய 2 அதிகாரிகள் உட்பட 2882 படை வீரர்கள் இராணுவத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகுவதற்கான தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர் ( ஏப்ரல் 22-25).

 

ஊடக அறிக்கை (தேசிய ஊடக மையம்)

[2019/04/26]

வதந்திகள் பரவுவதன் காரணமாக நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வலைத்தளங்கள், முகநூல், டுவிடர், வட்ஸ்அப் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு...

 

பயங்கரவாதிளை அடையாளம் காணுவதற்கு மக்களது உதவி கோரல்

[2019/04/26]

உதிர்த்த ஞாயிறு தினமான (21) ஆம் திகதி கொழும்பு மற்றும் வேறு நிலையங்களில் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு நபர்களை அடையாளம் காணுவதற்கு பொலிஸ் தலைமையகத்தினால் மக்களது ஒத்தழைப்ப...

 

அவசர தகவல்களுக்காக இராணுவத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்

[2019/04/23]

தற்பொழுது நாட்டில் நிலவும் அவசர பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்ட சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ் காணும் இராணுவ தலைமையகத்தின் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கவும்.

 

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்