››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

President Past News - 2019

President Past News - 2019


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை

[2019/07/05]

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் செயலிழந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் வர்த்தகர்களுக்கான நிவாரணமளிக்கும் நடவடிக்கையை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு குறித்த வர்த்தக சமூகத்தினரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

 

நாட்டுக்காக ஒன்றினைவோம் மொனராகலை மாவட்ட செயற்திட்டத்தின் நான்காவது தினம் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்றது

[2019/07/04]

பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய செயற்திட்டத்தின் ஐந்தாவது செயற்திட்டம் கடந்த முதலாம் திகதி மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமானது.

 

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் ஜனாதிபதி

[2019/07/03]

லங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் அங்கு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் பற்றிய சகல விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், விரைவில் அது பாராளுமன்றத்திலும் மக்களிடமும் வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் மாநாடு நாளை ஜனாதிபதி தலைமையில்

[2019/06/30]

போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் இன்றாகும்.

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தில் பாடசாலை நிகழ்ச்சித்திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன

[2019/06/25]

இம்மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரையின்பேரில் நேற்று முதல் ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு ஜனாதிபதியினால் அதிகாரமளிப்பு

[2019/06/23]

இலங்கை கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு, முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 4வது அதிவிரைவு ப்லோடில்லா என அதிகாரமளிக்கப்பட்டது.

கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்பு

[2019/06/23]

திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் (NMA) நேற்று (ஜுன், 22) இடம்பெற்ற கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

ஐ.நா சமாதான படையணிகளின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்க

[2019/06/21]

ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்றபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.

 

ஜனாதிபதி அவர்களின் பொசன் பௌர்ணமி தின செய்தி்

[2019/06/16]

மகிந்த மகா தேரரின் இலங்கை விஜயம் இடம்பெற்று 2326 வருடங்கள் பூர்த்தியாகும் பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும். இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபிக்கப்பட்ட தினமாகவும் பௌத்த கலாசாரம் இந்நாட்டில் வேரூன்ற காரணமாக அமைந்த நாளாகவும் உயரிய தேசிய பூஜைக்குரிய நாளாகவும் இன்றைய தினம் பௌத்தர்களால் போற்றப்படுகின்றது. ..

 

இலங்கை கடற்படையின் புதிய கப்பலுக்கு ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு

[2019/06/07]

அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மிக நீளமான ஆழ்கடல் ரோந்து கப்பலான P 626 கப்பலுக்கு முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இகபக 'கஜபாகு' என அதிகாரமளித்தது வைக்கப்பட்டது. குறித்த கப்பலுக்கு அதிகாரமளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (ஜுன், 06) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

 

சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

[2019/06/06]

மொறட்டுவ, கட்டுபெத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.

 

ஜனாதிபதி அவர்களின் ரமழான் வாழ்த்துச் செய்தி

[2019/06/05]

இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை, யாத்திரை ஆகிய பிரதான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய சமயத்தை பின்பற்றும் பக்தர்கள் நோன்பை நிறைவு செய்யும் வகையில் கொண்டாடும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பிவைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

 

சிவில் பாதுகாப்புப் படையினரின் நலன்புரி கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

[2019/06/04]

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 20 வருடகால சேவையை பூர்த்தி செய்த 50 வயது நிரம்பிய பெண் உறுப்பினர்களையும் 22 வருடகால சேவையை பூர்த்தி செய்த 50 வயது நிரம்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளையும் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்குதல் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

பரஸ்பர புரிந்துணர்வுடன் நாட்டில் சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ? ஜனாதிபதி

[2019/06/04]

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

?நாட்டுக்காக ஒன்றிணைவோம்? நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு நாளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பம்

[2019/06/03]

?நாட்டுக்காக ஒன்றிணைவோம்? நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு நாளை (03) முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டு வர இடமளிக்கப்பட மாட்டாது ? ஜனாதிபதி

[2019/06/02]

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டினதும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டுவர தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்தித்தார்.

[2019/05/31]

எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

புதிய விமானாப்படைத் தளபதி நியமனம்

[2019/05/29]

இலங்கை விமானப்படையின் தளபதியாக எயார் மார்ஷல் டிஎல் சுமங்கல டயஸ் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஜனாதிபதி வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு

[2019/05/28]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

 

விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

[2019/05/22]

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

 

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது - ஜனாதிபதி

[2019/05/20]

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் வெசாக் வாழ்த்துச் செய்தி

[2019/05/18]

கி. மு ஆறாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தின் சாக்கிய இராச்சியத்தில் பிறந்து, நிரஞ்சனா நதிக்கரையில் அமைந்துள்ள புத்தகயாவின் போதிமர நிழலில் ஞானம் பெற்று, குசினாராவின் உபவத்தன வனத்தில் பரிநிர்வாணமடைந்த புத்த பிரானின் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவுகூர்ந்து பூஜிக்கும் அதி உன்னத வெசாக் பௌர்ணமி தினமே இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ? சீன பிரதமர் சந்திப்பு

[2019/05/17]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.
 

 

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் ? சீன ஜனாதிபதி தெரிவிப்பு

[2019/05/15]

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

 

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் ? சீன ஜனாதிபதி தெரிவிப்பு

[2019/05/15]

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

 

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் ? ஜனாதிபதி வேண்டுகோள்

[2019/05/13]

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி அவர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களினால் இலங்கையர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இடமளிக்காதிருப்போம்? ஜனாதிபதி

[2019/05/09]

புதிய தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து பிரஜைகளும் அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமாக வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

பன்முக சமூகத்தின் நல்லிணக்கத்தை பேணிப் பாதுகாப்பதன் பொறுப்பு மதத் தலைவர்களையே சாரும்

[2019/05/07]

மிலேட்சத்தனமான பயங்கரவாதத்தை குறுகிய காலத்திற்குள் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எமது இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் நாட்டு மக்களிடையே காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் அனைத்து இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு மதத் தலைவர்களையே சாரும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை வன்மையாகக் கண்டித்துள்ள ஜனாதிபதி அவர்கள் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு துறையினருக்கு பணிப்பு

[2019/04/21]

நாட்டின் சில பகுதிகளில் இன்று முற்பகல் இடம்பெற்ற எதிர்பாராத வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அச்சம்பவங்கள் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க  

இலங்கை பொலிஸ் சேவையை தேசிய, சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

[2019/04/09]

இலங்கை பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்காக பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் இக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

 

போதைப்பொருளை வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை உபயோகிப்பவர்களுக்கு எதிரான சட்டதிட்டங்கள் தீவிரப்படுத்தப்படும். ? ஜனாதிபதி

[April 09 2019]

போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வருபவர்கள், விற்பனை செய்பவர்கள், போதைப்பொருளை வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை பாவிக்கும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் தீவிர சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

 

ஜனாதிபதி பராளுமன்றத்திற்கு விஜயம்

[April 05 2019]

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புகள் தொடர்பாக இன்று (04) பாராளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் பல முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

மேலும் வாசிக்க

 

வட, கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

[April 05 2019]

வட, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆறாவது அமர்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

 

ஜனாதிபதி தலைமையில் 'பக் மகா உறுதிமொழி'

[April 03 2019]

நாட்டைப் போதையிலிருந்து விடுதலை பெறச் செய்யும் எண்ணக்கருவிலான 'பக் மகா திவுரும' சித்திரை மாத உறுதிமொழி வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச், 03) நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

 

போதைப்பொருளை வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை உபயோகிப்பவர்களுக்கு எதிரான சட்&#இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 018;ருளை வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை பாவிக்கும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் தீவிர சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ உலக ஞாபகப் பதிவேட்டில் உட்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது

[April 01 2019]

பாரிய உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தான் போதைப்பொருளுக்கு எதிரான போராட்ட களத்தில் இறங்கியது எதிர்கால சந்ததியினருக்காக நல்லதோர் தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவே என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் அந்த போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார

மேலும் வாசிக்க

தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ உலக ஞாபகப் பதிவேட்டில் உட்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது

[March 24 2019]

புத்தபெருமானின் போதனைகளை பாதுகாத்து, பலப்படுத்தி எழுத்து மூலம் உலகிற்கு முன்வைக்கும் பொறுப்பு இலங்கையர்களான எம்முடையதாகும் என ஜனாதிபதி தெரிவிப்பு

மேலும் வாசிக்க

 

 

ஊடக அறிவித்தல்

[March 22 2019]

சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கை ஒன்றினை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.

மேலும் வாசிக்க

 

 

அநுராதபுரம் ?மெத்சிறி செவன? சிறுநீரக நோயாளர் பராமரிப்பு நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பு?

[March 22 2019]

சிறுநீரக நோய்த்தடுப்பிற்கு கடந்த 04 வருடங்களாக முக்கியத்துவமளித்து மேற்கொள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களினால் நாடு முழுவதிலுள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

 

 

Committee for technical aspects of inclusion of Teravada Tripitaka as a heritage in UNESCO's Memory of the World Register

[March 21 2019]

The President Maithripala Sirisena has taken measures to appoint a committee to advice the technical process of inclusion of Teravada Tripitaka in UNESCO's Memory of the World Register.

மேலும் வாசிக்க

 

 

உன்னத பௌத்த போதனையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி

[March 18 2019]

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவுக்கு முன்னர் ?திரிபீடகாபிவந்தனா? வாரத்தை பிரகடனப்படுத்தியதன் நோக்கம் நாட்டினுள் பௌத்த புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு திரிபீடகம் தொடர்பிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்குமேயாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

 

 

ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி கென்யா பயணம்

[March 13 2019]

கென்யாவின் நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல் கென்யாவிற்கு பயணமானார்.

மேலும் வாசிக்க

 

 

போதைப்பொருள் ஒழிப்புக்கு ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர் முப்படையினரின் கூடுதல் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் - ஜனாதிபதி

[March 09 2019]

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதியின் பின்னர் பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

 

 

ஜனாதிபதிக்கு ரணவிரு கொடி அணிவிப்பு

[March 06 2019]

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு முதலாவது ரணவிரு கொடியினை அணிவிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச், 05) இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

 

 

ஜனாதிபதி அவர்களின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

[March 04 2019]

ஒரே மனித குடும்பத்தின் சொந்தங்களாகிய நாம் கொண்டிருக்கும் தனித்துவ அடையாளங்களுக்கு அப்பால் ஆன்மீகம் என்ற நிலையில் அனைவரும் ஒரே மனித குடும்பமாக இணைந்திருக்க முடியும் என்பதே மானிடத்துவத்தின் மகிமையாகும்.

மேலும் வாசிக்க

 

 

நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள &990;ுதலாவது மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

[February 28 2019]

இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

மேலும் வாசிக்க

 

 

சிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டமையினால் கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

[February 26 2019]

கண்டி சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

மேலும் வாசிக்க

 

 

ஜனாதிபதி சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம்

[February 26 2019]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (25) முற்பகல், அநுராதபுரம் சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

மேலும் வாசிக்க

 

 

இந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும் - ஜனாதிபதி

[February 22 2019]

2019ஆம் ஆண்டில் தென் மாகாணத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பதற்கு 423 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மேலும் வாசிக்க

 

 

சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு தேசிய நிதியமொன்று தாபிக்கப்படும் - ஜனாதிபதி

[February 21 2019]

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

 

 

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி

[February 11 2019]

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலமொன்றை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு படிப்படியாக நடவடிகĮை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

 

 

இலங்கை தனது 71வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறது

[February 04 2019]

இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்று ஆகும்.71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் பிரதான சுதந்திர தின அணிவகுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

 

 

ஜனாதிபதி அவர்களின் 71வது தேசிய சுதந்திர தினச் செய்தி

[February 04 2019]

133 வருடங்களாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்துவந்த இலங்கை, சுயாதீன இராச்சியம் என்ற நிலையை அடைந்த இத்தினத்தை ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04ஆம் திகதி இவ்வாறு விழாக்கோலத்துடன் நினைவு கூறுகின்றோம்.

மேலும் வாசிக்க

 

 

ஜனாதிபதி மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் இல்லத்திற்கு விஜயம்

[February 03 2019]

ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இணைந்து மாலி நாட்டில் பணியிலிருந்தபோது உயிர்நீத்த மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

 

 

President's condolence message

[January 29 2019]

I was deeply saddened and shocked by the news of two great sons of Sri Lanka sacrificing their lives while serving the mission of world peacekeeping. I pay my respect and honour to them as they died in the cause of world peace process to ensure the independence of mankind.

மேலும் வாசிக்க

 

 

பொலிஸ் திணைக்களம் கல்விமான்கள் நிறைந்த தொழில்சார் நிபுணத்துவமடைந்த சேவையாக வேண்டும்

[January 23 2019]

பொலிஸ் திணைக்களமானது கல்விமான்களைக் கொண்ட தொழில்சார் நிபுணத்துவம் அடைந்த சேவை நிலையமாக வேண்டும் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

 

 

திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்

[January 22 2019]

2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் ?Earth Watchmen? திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டத்..

மேலும் வாசிக்க

 

 

வடக்கில் 1200 ஏக்கருக்கு மேற்பட்ட காணி விடுவிப்பு

[January 22 2019]

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உடையார்கட்டு மற்றும் மூன்று இராணுவப் பண்ணைகள் உட்பட இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மொத்தம் 1201.88 ஏக்கர் திங்கள் கிழமையன்று ( ஜனவரி,21)விடுவிக்கப்பட்டன்.

மேலும் வாசிக்க

 

 

இலங்கை - பிலிப்பைன் அரச தலைவர்கள் சந்திப்பு

[January 17 2019]

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை மீண்டும் முன்னெடுத்து செல்வதற்காக பொருளாதார சபையொன்றினை நிறுவுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.

மேலும் வாசிக்க

 

 

ஜனாதிபதியின் தை பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

[January 15 2019]

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை அளித்துள்ளார்கள் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் வாசிக்க

 

 

பாடசாலை சூழலில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் பரவ இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிசாருக்கு பணிப்பு

[January 11 2019]

பாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை.

மேலும் வாசிக்க

 

 

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

[January 10 2019]

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

மேலும் வாசிக்க

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு நிகழ்வின் நான்கு ஆண்டு பூர்த்தி இன்று

[January 09 2019]

நான்கு வருட கால அனுபவங்களுடன் மக்கள் நேய செயற்திட்டங்கள் வெற்றியை நோக்கி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

மேலும் வாசிக்க

 

 

வறுமை ஒழிப்பினை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

[January 02 2019]

மக்களின் வறுமை நிலையை ஒழிப்பதனை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார.

மேலும் வாசிக்க

 

 

ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

[January 01 2019]

புத்தாண்டு பிறப்பினை அண்மித்த காலமானது, நாம் கடந்து வந்த வருடத்தில் அமது வாழக்கையில் முகங்கொடுக்க நேர்ந்த வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளைப்பற்றியும் மீண்டும் மீட்டி பார்ப்பதற்கான சிறந்த தருணமாகும்.

மேலும் வாசிக்க

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்