மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/7/2015 8:48:01 PM பாதுகாப்பு சேவை கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது

பாதுகாப்பு சேவை கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது

இரண்டு நாட்களுக்கு முன்பதாக பாதுகாப்பு கல்லூரியின் பணிப்பாளர் மற்றும் அதிபர்க்கிடையில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருந்தது.இப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக பாதுகாப்பு அமைச்சினால் ஒரு விஷேட சந்திப்பொன்று நேற்று வௌ்ளிக்கிழ மை (6) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அத்தோடு அவர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகளை சம்பந்தப்பட்ட அனைவருளுக்கும் முன்னிலையில் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்வுகாணப்பட்டது.

இச்சந்திப்பானது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு பி.எம். யூ.டி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு பிரதம அதிகாரி, இராணுவத் தளபதி, கடற்படை தளபதி விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர், பணிப்பாளர், பாதுகாகப்புச் சேவை கல்லுரியின் அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து சில அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் விளைவாக, பணிப்பாளர் மற்றும் முதல்வர்க்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டது அத்தோடு போர் வீரர்களின் குடும்பத்தினரின் குழந்தைகளின் கல்வியில் கவனம் கொண்டு ஒரு சுமுகமான தீர்மானத்திற்கு வந்தார்கள்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தின் போது பாதுகாப்பு சேவை கல்லூரியின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றியும் இக்கூட்டத்திற்கு பங்கேற்றவர்களுக்கு மத்தியில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது

இவ்வாறான ஒரு விசேட கூட்டம் ஒன்று 9 ஆம் திகதி திங்கற் கிழமை அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்புடன் இடம் பெறுவதற்கு அனைத்து தரப்பினரும் உடன்பட்டார்கள். அத்தோடு மற்றொரு வசதியான நாளில் பெற்றோர்களுடனும் இவ்வாறான ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்வதற்கும் உடன்பட்டார்கள்.

திங்கள் (2) பாதுகாப்பு சேவை கல்லூரியின் பணிப்பாளர் மற்றும் முதல்வர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களினால் இருதரப்பட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்