மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/6/2016 2:49:32 PM பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத சடங்குகளில் கலந்து கொண்டார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத சடங்குகளில் கலந்து கொண்டார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன் அவர்கள் மதசடங்குகளில் கலந்து கொல்லும் வகையில் அனுரதாபுரத்திற்கு விஜயம்மொன்றினை (மே.4) மேற்கொண்டார்.அத்துடன் இராஜாங்க அமைச்சர் மிரிசிவெடிய ரஜமஹா விகாரை மற்றும் சிறி மஹா போதி ஆகிய விகாரைகளுக்கும் சமய சடங்குகளில் கலந்து கொள்ளுவதற்கு விஜயம் செய்தார்.பின்னர் பீடாதிபதி வணக்கத்துக்குரிய கலாநிதி பல்லேகம சிறிநிவச நாயக்க தேரேர் அவர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

மேலும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மிஹிந்தல ரஜ மஹா விகாரையில் இடம்பெற்ற நிகழவுக்கு இன்று(மே.5) கலந்து கொண்டதுடன் விகாரையின் வருடாந்த வர்ணம் பூசும் நிகழ்வையும் ஆரம்பித்து வைத்தார். இதேவேளை, இவ்விகாரையின் வருடாந்த ஏற்பாடுகளை செய்யும் வகையில் இலங்கை விமானப்படை உதவிகளை வழங்கும்.

இந்நிகழ்வில் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. சாகல ரத்நாயக்க மற்றும் வட மத்திய மாகாண முதலமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ருவன்வெலிசாயவில் நடை பெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டு விகாரையின் பிரதம தலைவர் வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

விகாரையில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களர் மத்தியில் அமைச்சர் விஜேவர்தன இங்கு உரையாற்றுகையில்....
பொசன் போய தினத்தை முன்னொட்டி அட்டமஸ்தானய மற்றும் அதன் புனித சூற்றாடல் ஆகியவற்றிற்றின் வசதிகளை தயார்படுத்த உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.அத்துடன் நாடு முழுவதும் இருந்து எதிர்வரும் காலத்தில் அனுராதபுரத்திற்கு வருகின்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு குடி நீர் வசதி,சுகாதாரவசதிகள் மற்றும் பாதுகாப்பு போன்றனவும் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துக் கொண்டார்.அத்துடன் இவ் நடவடிக்கைள் அனைத்தும் ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் பாதுகாப்பு அமைச்சின் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக் காட்டினார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்