மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/24/2016 2:39:38 PM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இராணுவத்தினர்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இராணுவத்தினர்

[2016/05/24]

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அரநாயக்க பிரதேசத்திலிருந்து இதுவரை 24 சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6 குழந்தைகளினது சடலங்களும், 17 ஆண்களினது சடலங்களும், 6 பெண்களது சடலங்களும் காணப்படுகின்றன. அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அரநாயக்க மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு ஆகிய பகுதிகளில் ஏராளமான நடமாடும் மருத்துவ முகாம்ங்கள் இராணுவத்தினரால் நிறுவப்பட்டது.அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வகையில் இராணுவ சேவா வனிதா பிரிவு உலர் உணவு, ஆடைகள், பால் மா மற்றும் பல அத்தியாவசியப் பொருடகளையும் அனுப்பிவைத்துள்ளது.

தங்கி இருந்த வெள்ள நீர் வேகமாக வெளியேருவதாலும் இடம் பெயர்ந்த மக்கள் தமது இடங்களுக்கு திரும்பி செல்ல ஆரம்பித்து இருப்பதாலும் அனைத்து கட்டளை அதிகாரிகளும் அனர்த்தத்தின் பின்னரான நடவடிக்கைள் பற்றி விழிப்பாய் இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்