மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/8/2016 2:25:55 PM இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு

[2016/06/07]

பாதுகாப்பு படைகளில் சேவையில் ஈடுப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற அல்லது உரிய முறையில் விடுமுறை பெறாத முப்படை வீரர்கள் சட்ட விதிமுறைகளுக்கமைய நீங்கிச் செல்லும் பொருட்டு பொது மன்னிப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இம்மாதம் 13ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்தை பொது மன்னிப்பு காலமாக அறிவித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்யொராச்சி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் இராணுவம்,கடற்பட, விமானப் படை என்று தனித்தனி படைகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் இம்முறை முப்படையினருக்கு ஒரே பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முப்படைகளில் நீண்ட காலம் சேவையில் ஈடுப்பட்ட நிலையில் உரிய முறையில் வீடுமுறை பெறாதவர்களை சட்ட விதி முறைகளுக்கமைய நீக்குவதற்காக பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு இன்று (ஜுன.07) கொள்ளுபிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் பாதுகாப்பு எஸ.ஹெட்டியாரச்சி, இராணுவத்தின் நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, கடற்படையின் ஆளணி பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி, விமானப் படையின் நிர்வாக பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சந்தன வெலிகல ஆகியோர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் உரையாற்றுகையில் -

இவ்வாறு தப்பிச் சென்றவர் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்து சுமார் 35ஆயிரம் பேர்வரை உள்ளனர் இவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 25ஆயிரம் பேரும், கடற்படையைச் சேர்ந்த 7 ஆயிரம் பேரும் விமானப் படையைச் சேர்ந்த 510 பேரும் அடங்கவர்.

பொது மன்னிப்பு காலப்பகுதிக்குள் இவர்கள் தமது ரெஜிமன்ட் நிலையங்கள் மூலம் தமது வருகையை உறுதிப்படுத்தி சட்ட ரீதியில் விலகிச்செல்ல முடியும். ஏதாவது ஒரு வகையில் 10 ஆயிரம் ரூபா வரை கொடுப்பனவு செலுத்த வேண்டியிருப்பின் அவற்றை மீண்டும் செலுத்த வேண்டிய தேவையில்லை அத்துடன் இவ்வாறு வருகைதருபவர்களுக்க தண்டனை வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்