மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/16/2016 3:37:50 PM வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இராணுவத்தினர் சீருடை விநியோகம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இராணுவத்தினர் சீருடை விநியோகம்

[2016/06/16]

கொழும்பு பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தைக்கப்பட்ட பாடசாலை சீருடை விநியோகம் இராணுவத்தினரால் நேற்று (ஜுன்.15) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் நாட்டில் நீடித்த சீரற்ற கால நிலை காரணமாக கொழும்பின் சுற்றயல் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக கொலன்னவ, வெல்லம்பிட்டி, ஒருகடவத்த, மீத்தோட்டமுல்ல மற்றும் அங்கோட ஆகிய பிரதேசங்கள் கடுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.

இவ் அனர்த்ததின்போது நிவாரன மற்றும் மீட்பு பணிகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டதுடன் அதன் பின்னர் நடைபெற்ற துப்பரவு செய்யும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை விசேட அமசமாகும்.

அதனைத் தொடர்ந்து, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு தைத்த பாடசாலை சீருடை வழங்குவதற்கு இராணுவத்தளபதி அவர்களின் வழிகாட்டலில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இத் தைத்த சீருடை வழங்கும் வைபவம் கொலன்னாவ வெஹெரகொட மகா வித்தியாலயம் மற்றும் பிட்டுகால யசோதர மகா வித்தியலயம் ஆகிய பாடசலைகளில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் உலர் உணவு பெற்றுக் கொண்ட இதேவேளை, கொலன்னாவ பிரதேசத்தில் காணப்படுகின்ற 19 பாடசாலைகளின் 250 மாணவர்கள் தமக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொண்டனர். இச்செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கு DSI நிறுவனமும் உதவி வழங்கியது.

இந்நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்