மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/29/2016 10:06:34 AM பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடுகுருந்த விமானப்படை நிலையத்திற்கு விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடுகுருந்த விமானப்படை நிலையத்திற்கு விஜயம்

[2016/08/26]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கடுகுருந்த விமானப்படை நிலையத்திற்கு இன்றைய தினம் (ஆகஸ்ட், 26) விஜயம் செய்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்துகொண்டார்.
ஸ்தலத்திற்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத் சின்ஹல அவர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றார்.

தொடர்ந்து, இலங்கை விமானப்படையின் கடுகுருந்த ஆளில்லா விமானம் தொடர்பான ஆய்வு நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் ஆளில்லா விமான ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்ற செயற்பாடுகளை இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில், இலங்கை விமானப்படையின் முகாமைத்துவ சபை பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் கீழ் நிலை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்