மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/30/2016 10:37:31 AM பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் படை வீரர்களுக்கான ஆசிர்வாத நிகழ்வில் பங்கேற்பு

பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் படை வீரர்களுக்கான ஆசிர்வாத நிகழ்வில் பங்கேற்பு

[2016/08/29]

அகில இலங்கை அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த படை வீரர்கள் சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட்,28) ருவன்வெளி மஹா சாய வளாகத்தில் படை வீரர்களுக்கு ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொடுக்கும் வகையில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.

குறித்த இந்நிகழ்வு தாய் நாட்டின் விடுதலைக்கான யுத்தத்தின்போது உயிர்த்தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான ஆசீர்வாதத்தினை வேண்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், மதிப்பிட முடியாத சேவைகளையும் தியாகங்களையும் புரிந்த எமது படைவீரர்களை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது. அங்கவீனமுற்ற வீரர்களின் கொடுப்பனவுகளை வாழ்நாள் பூராகவும் வழங்குவதற்காக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் காரணமாக அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் விடிவிற்காக உயிர் நீத்த, அங்கவீன முற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பதினரின் சேமநல மேம்பாட்டிற்காக பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கும் நோக்குடனே விசேட சலுகைகள் அடங்கிய 'விருசர' வரப்பிரசாத அட்டை வழங்கும் திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. படைவீரர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதானது மிகவும் சவாலான விடயம் என்றபோதிலும் முடிந்தவரை அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தினார்.
இதேவேளை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ருவன்வெலிசாய தலைமை விகாராதிபதி வணக்கத்துக்குறிய பல்லேகம ஹேமரத்ன தேரரைத் தரிசுத்து ஆசிர்வாதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர். துமிந்த திசாநாயக்க, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ. சந்திரானி பண்டார, ரணவிரு சேவா அதிகார சபை உறுப்பினர்கள் மற்றும் படை பெறும் எண்ணிக்கையிலான படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்