மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/5/2016 10:39:22 AM “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” வெற்றிகரமாக நிறைவு

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” வெற்றிகரமாக நிறைவு

[2016/09/04]

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2016” கடந்த வெள்ளியன்று (செப்டம்பர், 02) வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை உட்பட 71 நாடுகளைச் சேர்ந்த புத்தி ஜீவிகள் கலந்து கொண்டனர்.

இவ்வருட சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் “மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” எனும் தொனிப்பொருளில் கருத்தாடல்கள் இடம்பெற்றன.

வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்ற நிறைவு நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்துகொண்டார்.

மேற்படி நிறைவு நிகழ்வில் உரை நிகழ்த்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு. எசல வீரகோன், இன்றைய இலங்கையானது மென்வலு தொடர்பில் சிறப்பான உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான நடைமுறை வெளிப்பாட்டினைக் கொண்டுள்ளது. இது,

சமாதானத்திற்கான ஈடுபாடு, சிநேகத்தினை ஏற்படுத்தும் வழிமுறைகள், மற்றும் அவற்றிற்கான தூண்டுதல்கள் பலவற்றை வரவேற்கிறது. ஜனநாயகம் ; சட்டத்தின் ஆட்சி; நல்லிணக்கம்; மனித உரிமைகளைச் செயல்படுத்தல் மற்றும் பாதுகாதத்தல்; நல்லாட்சியை வலுப்படுத்தல்; விதிகள் சார்ந்த அமைப்புகள் எனபவற்றை ஒருங்கிணைத்து செயற்படுத்த இது அவசியமாகின்றது. உண்மையில் நாம் 'மென்வலுவினை நமது நாட்டில் விரிவுபடுத்தி உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு மாநாடானது 2011ஆம் ஆண்டு சுமார் 60 நாடுகளின் பங்களிப்புடன் ஆரம்பமானது. மேலும் இது எதிர் வரும் வருடங்களில் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டு வட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.

நிறைவு வைபவத்தில் அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட அதேவேளை உரைநிகழ்த்திய அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள் உட்பட 70 நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செயதிகள் >>

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” க்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இராணுவம்

செப்டம்பரில் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2016”


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்