மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/5/2016 12:25:47 PM ‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி ஆரம்பம்

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி ஆரம்பம்

[2016/09/05]

இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட களமுறைப் பயிற்சியான ‘நீர்க்காக தாக்குதல்–VII’ நிகழ்வு 7வது வருடமாக கொக்கிளாய் பிரதேசத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர்.4) ஆரம்பமானது.

மின்னேரியாவில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை தலைமையகத்தில் கூட்டாக இணைந்து நடைபெற்ற பயிற்சிக்கான தயாரிப்பு தொடர்பான விரிவான கூட்டத்தைத் தொடர்ந்து ஏழாவது முறையாகவும் ஆரம்பமானது. இவ்வருட குறித்த இந் நிகழ்வில் இராணுவத்தின் காளாற்படையினர், கடற்படை வீரர்கள் மற்றும் விமானப் படை வீரர்களுடன் பங்களாதேஷ், சீனா, இந்தியா, ஜப்பான், மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு படைவீரர்கள் 58 பேர் உட்பட மொத்தமாக 3458 பேர் கலந்து கொண்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது.

இப்பயிற்சியின் மூலம் திட்டமிடல், தயார்படுத்தல், சூத்திரங்களை பயன்படுத்தல், ஒருங்கிணைத்தல், கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தந்திரோபாயங்கள், மற்றும் விஷேட கள நடவடிக்கைகள், போர் கண்காணிப்பு, கூட்டிணைப்பு, நினைவகப் படுத்தல், சோதனைகள், திடீர் தாக்குதல்கள், முன்னெச்செரிக்கை மற்றும் தடுப்புகள், மீட்பு பணிகள், அனர்த்த நிவாரணப்பணிகள் மற்றும் நகர்ப்புற சண்டைகள் தொடர்பான திறன்களை பெற்றுக்கொள்ள எதுவாக அமையும்.

இக்களமுறைப் பயிற்சி இம்மாதம் 25ஆம் திகதி நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள் >>>

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி செப்டெம்பரில் ஆரம்பம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்