மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/24/2016 3:16:41 PM கடற்படையினரால் ஹம்பேகமுவவில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு

கடற்படையினரால் ஹம்பேகமுவவில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு

[2016/09/24]

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கடற்படையினரால் மேட்கொள்ளப்படும் சமூக சேவைகள் திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் ஆகியோர் பயன் பெறும் வகையில் மொனராகல ஹம்பேகமுவை கனிஷ்ட பாடசாலை வளாகத்தில் கடற்படையினரால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டது. அத்துடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் வருகை தந்த ஊவா மாகாண திட்ட பணிப்பாளர், திரு. ஜகத் புஸ்பகுமார அவர்களினால் குறித்த இந் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (செப்டம்பர்.23) திறந்து வைக்கப்பட்டது.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசத்தில் இத் திட்டம் மிகவும் அவசியமான ஒரு தேவையாகும். மேலும் இது 10,000 லீட்டர் நீரை சுத்திகரித்து பாடசாலையில் கற்கும் 180 க்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இப்பிரதேசத்தில் வசிக்கும் 300 க்கும் அதிகமான குடும்பங்களும் சுத்தமான குடிநீரை பெரும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப திறன் மூலம் நாடு பூராவும் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேசங்களில் 25 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மகா சங்க உறுப்பினர்கள், தென் கிழக்கு கடற்படை பிரதி கட்டளைத்தளபதி சுதத் குறுகுலசூர்ய, சிரேஷ்ட அதிகாரிகள் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பல பிரதேச மக்களும் கலந்துக்கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்