மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/6/2016 10:02:55 PM இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் “பாதுகாப்பு நிலையம்” அங்குரார்பணம்

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் “பாதுகாப்பு நிலையம்” அங்குரார்பணம்

[2016/10/06]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் ஏற்பாடு செய்யபட்ட “பாதுகாப்பு நிலைய’ த்தின் அங்குரார்பண நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஒக்டோபர் .05) நடைபெற்றது. குறித்த இந்நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் பொறியிலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

அறிவு சார்ந்தவிடயங்கள், அரசியல் விவாதம் மற்றும் பார்வையாளர்களால் தெரிவு செய்த குறித்த தலைப்பு சம்பந்தமாக ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இப்பாதுகாப்பு நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் அமர்வின் சிறப்பு பேச்சாளராக புதுடெல்லி, பாதுகாப்பு கற்கைகள் மற்றும் பகுப்பாய்வு நிலையத்தின் பேராசிரியர் எஸ்டி முனி கலந்து கொண்டார்.

கடந்த மாதம் இந்தோ-பாக்கிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 'இந்தோ-பாக் நிலைமை' பதட்ட நிலை அதிகரித்து காணப்பட்டது பேராசிரியர் எஸ் டி முனி அவர்களின் மையக்கருத்தாக அமைந்திருந்தது.

மேலும், குறித்த இவ் ஆரம்ப வைபக நிகழ்வு சாதகமான கருத்துக்களுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.

இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள்,பாகிஸ்தான், இந்தியா, ஐக்கிய இராச்சியம், துருக்கி, அவுத்திரேலியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான இராஜதந்திர பிரதிநிதிகள் உட்பட பாதுகாப்பு ஆலோசகர்கள், இலங்கையின் மூத்த புத்தி ஜீவிகள், பாதுகாப்பு படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்