மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/23/2016 11:50:00 AM இலங்கை கடற்படைக் கப்பல்களான ‘சயுர’ மற்றும் சுரனிமல இந்தியாவிற்கு பயிற்சி விஜயம்

இலங்கை கடற்படைக் கப்பல்களான ‘சயுர’ மற்றும் சுரனிமல இந்தியாவிற்கு பயிற்சி விஜயம்

[2016/10/22]

இலங்கை கடற்படையின் கடலோர ரோந்து கப்பல் ‘சயுர’ மற்றும் வேக ஏவுகணை கப்பல் சுரனமல ஆகியன ஓக்டேபார் மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை நல்லெண்ண அடிப்படையிலான விஜயம் மற்றும் பயிற்சியிலும் பங்குபற்றும் வகையில் கொழும்புத் துறைமுகத்திலிருந்து இன்று (ஒக்.22) இந்தியா புறப்பட்டன.

குறித்த இவ் இரு கப்பல்களும் நாளை (ஒக்.23) கொச்சின் துறைமுகத்தை சென்றடையவுள்ளன.மேலும் பயிற்சி நடவடிக்கைளிலும் பங்குபற்றவுள்ளன. இலங்கை கடற்படையின் 20 மிட்சிப்மென் உள்ளிட்ட 304 கடற்படை வீரர்களும் கடற்படை பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளனர். குறித்த இவ் ஏழு நாள் விஜயத்தின்போது கடற்படை வீரர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன் இரு நாட்டு கடற்படை வீரர்களுக்கிடையில் நட்புறவையும் பேன முடியும்.

மேலும், இவ்விஜயத்தின்போது குறித்த கடற்படைக் குழு இந்திய தெற்கு கடற்படைத்தள பயிற்சிக் கல்லூரிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறுபட்ட பயிற்சி நடவடிக்கைளிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.அத்துடன் இவ் விஜயத்தின் மூலம் உலகின் முன்னேறிய நாடுகளின் கடற்படைகளின் அண்மைக்கால வளர்ச்சிகளை நேரடி அனுபவத்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையும்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்