மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/15/2016 1:11:22 PM கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் சுமார் 2.33 ரூபா வருமானம் - இலங்கை கடற்படை

கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் சுமார் 2.33 ரூபா வருமானம் - இலங்கை கடற்படை

[2016/11/15]

கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் இலங்கை கடற்படையினர் சுமார் 2.33 ரூபாவினை வருமானமாக ஈட்டியுள்ளனர். எவன்ட் கார்ட் வசமிருந்த இக்கடல்சார் பாதுகாப்பு சேவையினை 2015ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இவ்வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி முதல் சுமார் 6646 கப்பல் பயணங்கள் இப்பிராந்தியத்தினூடாக இடம்பெற்றுள்ளன. இதில் சுமார் 6150 பயணங்களுக்கு, காலியில் அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு அலுவலகங்களினூடாகவும் 496 பயணங்களுக்கு கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு அலுவலகங்களினூடாகவும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு சேவையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானத்தை அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்தில் நேரடியாக வைப்பிலிட்ட வைப்பிலிடப்பட்டுள்ளது.

வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டிருந்த எவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தினை இரத்து செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் விஷேட வழிகாட்டல்களுக்கமைய பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு கடற்படையிரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட இலங்கை கடற்படையினர் வர்த்தக கப்பல்களுக்கு ஆயுத மற்றும் வெடிபொருட்கள் வழங்கும் சேவையினை பிரதானமாக முன்னெடுத்து வருகின்றனர். மேலும் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் வர்த்தக கப்பல்களுக்கு முக்கிய பாதுகாப்பு பணிகளுக்கு ஆதரவு செயற்பாட்டினையும் முன்னெடுத்து வருகின்றது.

கொழும்பு மற்றும் காலியில் அமைந்துள்ள செயற்பாட்டு அலுவலகங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் இதனுடன் தொடர்புடையவைகளை விநியோகித்தல், வைத்துக்கொள்ளல் மற்றும் மீள பெற்றுக்கொள்ளல் எனும் நடவடிக்கைகளை பாதுகாப்பு நிபுணர் குழுவினர்கள் மூலம் கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்