மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 12/27/2016 11:15:47 AM பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீடு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீடு

[2016/12/27]

சட்டரீதியாக அனுமதி பெறாமல் விடுமுறையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் தமது சேவை தலைமையகத்திற்கு சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து சட்ட ரீதியாக இம்மாதத்திற்குள் விலகிச் செல்வதற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் இம்மாதம் (டிசம்பர்) 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை (டிசம்பர்.26 வரை) 7 இராணுவ அதிகாரிகள் மற்றும் பல இராணுவ வீரர்கள் 2 கடற்படை அதிகாரிகள் மற்றும் 424 கடற்படையினர் மற்றும் 16 விமானப்படை அதிகாரிகள் 195 விமானப்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக விலகிச் செல்லவதற்கான அனுமதியினை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு ஊடக மையத்தின் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவத்துள்ளார்.

இப்பொதுமன்னிப்பானது இவ்வருடம் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பொதுமன்னிப்புக் காலம் என்பதோடு முதலாவது பொதுமன்னிப்புக் காலம் ஜூன் 13 இலிருந்து ஜூலை 12 வரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, சேவையிலிருந்து விலக விரும்பும் படை வீரர்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சேவை மையங்களுக்கு அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

தொடர்பான செய்திகள் >>

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்