மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 12/29/2016 2:41:40 PM 66வது பிரிவின் படைவீரர்களினால் சிவில் சமூகம் சார்ந்த செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு

66வது பிரிவின் படைவீரர்களினால் சிவில் சமூகம் சார்ந்த செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு

[2016/12/29]

இலங்கை இராணுவத்தின் 66வது பிரிவின் படைத் தலைமையகத்தினால் பூனேரி கிரஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

குறித்த இந்நிகழ்வில் தலா ரூபா 1500 பெறுமதியான 200 பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலன்னாவ ஸ்ரீ மகா போதி விகாரையின் விகாராதிபதி வண. பொரல்ல கோவித தேரர் மற்றும் பல நன்கொடையாளர்களின் நிதி அனுசரனையினால் குறித்த இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்