மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/3/2017 10:44:59 AM தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் திறந்துவைப்பு

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் திறந்துவைப்பு

[2017/01/03]

பத்தரமுல்ல “சுஹுறுபாய” 8ம் மாடியில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களினால் இன்று (ஜனவரி.02) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த இந் நிலையத்தினால் “இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலைய பாதுகாப்பு மீளாய்வு 2017” எனும் அறிக்கை வெளியிடப்பட்டது. இவ் அறிக்கையின் முக்கிய நோக்கம் புரிந்துணர்வு மற்றும் பகுப்பாய்வு, தேசிய, பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு மற்றும் பூகோள அரசியல் போன்றவற்றின் புரிந்துணர்வினை அதிகரிப்பதற்காக முன்னுரிமை அளித்தல் என்பனவாகும். மேலும் இவ் அறிக்கையின் முதற் பிரதி பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி அவர்களுக்கு நிலையத்தின் பணிப்பாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சிற்காக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் முதற்தர தேசிய பாதுகாப்பு சிந்தனை குழுவாக இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது. இக்கற்கை நிலையத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.insssl.lk ஆனது பாதுகாப்பு செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்புதிய தேசிய பாதுகாப்பிற்கான சிந்தனைக் குழுவினால் தேசிய மற்றும் சர்வதேச போக்குகளுக்கமைய ஆய்வு பல முன்னெடுக்கப்படவுள்ளன.மேலும் இந்நிலையம், அரச, தனியார்துறை மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அதன் ஸ்திரத்தன்மை என்பவற்றை பாதிக்கும் காரணிகள் தொடர்பாக விவாதிக்கவும் கலந்துரையாடவும் தளம் அமைத்துக்கொடுக்கவுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்