மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/4/2017 12:43:36 PM 2016ம் ஆண்டில் கப்பல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம் 2.26 பில்லியன் ரூபா வருமானம்

2016ம் ஆண்டில் கப்பல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம் 2.26 பில்லியன் ரூபா வருமானம்

[2017/01/04]

வரையறுக்கப்பட்ட எவன்காட் கப்பல் சேவை நிறுவனத்தை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்ற பின்னர் கப்பல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம் 2.26 பில்லியன் ரூபா வருமானத்தினை 2016ம் ஆண்டு ஈட்டியுள்ளது. 2016ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மத்திய நிலையத்தினூடாக 5,928 கப்பல் சேவைகளும் காலி மத்திய நிலையத்தினூடாக 443 கப்பல் சேவைகளுமாக மொத்தம் 6,371 கப்பல் சேவைகளினை கடற்படையினர் முன்னெடுத்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றது.

இலங்கை கடற்படையினர் 2015 நவம்பர் 13ம் திகதி முதல் 2017 ஜனவரி 02ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மாதாந்தம் 573 கப்பல்கள் எனும் அடிப்படையில் மொத்தம் 7,457 கப்பல் பாதுகாப்பு யல்பாடுகள் மூலம் 2.63 பில்லியன் ரூபா வருமானாக ஈட்டப்பட்டுள்ளது. கொழும்பு மத்திய நிலையத்தினூடாக 6,922 கப்பல் சேவைகளையும் காலி மத்திய நிலையத்தினூடாக 535 கப்பல் சேவைகளையும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட பாதுகாப்பு யற்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தினை நேரடியாக அரச நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இலங்கைக்குள் பிரவேசிக்கும் கப்பல்களுக்கு ஆயுதம், ஆயுத தளபாடங்கள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான இதர உபகரணங்கள் என்பனவற்றை பொறுப்பேற்றல், வைத்துக்கொள்ளல், விநியோகித்தல் ஆகிய செயற்பாடுகள் கொழும்பு மற்றும் காலி மத்திய நிலையங்களினுடாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்