மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/17/2017 1:54:11 PM திங்கட்கிழமை கோட்டே ரயில் நிலையத்தின் முன் லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டாவின் ஆர்பாட்டம்

திங்கட்கிழமை கோட்டே ரயில் நிலையத்தின் முன் லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டாவின் ஆர்பாட்டம்

[2017/01/17]

(ஊடக அறிக்கை)

இராணுவ நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக அங்கவீனமுற்ற லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டா, யக்கல இராணுவ ஆடைத் தொழிற்சாலையில் இலகு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டார். அவருக்கு இவ்வாடைத் தொழிற்சாலையின் சஹன சேமலாப கடன் திட்டத்தின் கணக்கினை கையாளும் எழுதுவினைஞர் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இவரின் காலப்பகுதியில் இராணுவத்தினரின் உள்ளக கணக்காய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின் போது சஹன சேமலாப கடன் திட்டத்தில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றது கண்டறியப்பட்டு அது தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கான அவசியம் கோரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் போது சஹன சேமலாப கடன் திட்டத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடுகளுக்கு அதற்கு பொறுப்பாகவிருந்த பொறுப்பதிகாரி, லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டா ஆகியோர் தொழிற்சாலையில் தமது சக வீரர்கள் போலி பெயர் பட்டியல்களை தயாரித்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டாவிடமிருந்து 465,525/= ரூபாவினை மீள பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரை செய்தது. இப்பரிந்துரை இறுதியாக இராணுவ தளபதியினளால் மீள உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இத் தீர்மானங்களின் அடிப்படையில் லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டா நிர்ணயிக்கப்பட்ட மொத்த தொகையில் 250,000/= ரூபாவினை யக்கல இராணுவ ஆடைத் தொழிற்சாலைக்கு ஏற்கனவே செலுத்தியுள்ளார். இவ் இராணுவ வீரர் 50% அங்கவீனமுற்றோர் வகுதியில் மாதாந்த சம்பளத்துடன் அங்கவீனமுற்றோருக்கான ஓய்வூதிய கொடுப்பனவாக ரூபா. 65,597.56வினை 2013 ஆகஸ்ட் 26ம் திகதி முதல் பெற்று வருகின்றார். இதன் பிரகாரம் யக்கல இராணுவ ஆடைத் தொழிற்சாலைக்கு செலுத்துவதற்கு எஞ்சியுள்ள 215,252/= ரூபாவினை அவரது கொடுப்பனவில் இருந்து பெற்றுக்கொள்லும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள அவரை அவரது படைப்பிரிவிற்கு அறிக்கையிடுமாறு வாய்மொழியாகவும் எழுத்திலும் அறிவிக்கப் பட்டபோதிலும் இன்றுவரை அவர் அதனை மேற்கொள்ளவில்லை.

இராணுவ ஆடைத் தொழிற்சாலை சேமலாப கடன் திட்டத்தில் இவர் மேற்கொண்ட நிதி முறைகேடுகளுக்கு இராணுவத்தினால் இவரின் அங்கவீன நிலைமை கருதி இவருக்கு எதிராக பாரதூரமான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டாவினால் தற்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் இராணுவத்திற்கு அவமதிப்பும் அதன் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டுள்ளது. (முடிவு)


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்