மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/18/2017 5:50:38 PM இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற முப்படையினரை கைது செய்ய நடவடிக்கை

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற முப்படையினரை கைது செய்ய நடவடிக்கை

[2017/01/18]

(2016) டிசம்பர் 31ம் திகதி நிறைவுபெற்ற பொதுமன்னிப்பு காலப்பகுதிக்குள் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்ளத் தவரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மையத்தின் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான இரண்டு சந்தர்ப்பங்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற முப்படையினரை கைது செய்யும் நடவடிக்கையினை காவல் துறையினர் மற்றும் குடி வரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் ஆகியன மேட்கொண்டு வருகின்றன. இதன்பிரகாரம் (2016 ) டிசம்பர் 31ம் திகதியிலிருந்து (2107 ஜனவரி 17) இற்றைவரை 170 இராணுவபடை வீரர்களும் ஒரு இராணுவ அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தப்பிச்சென்ற முப்படையினரை அதிகாரிகள் தொடர்ந்தும் கைது செய்ய துரித நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேட்கொள்ளப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றனர்

மேலும், கடந்த பொதுமன்னிப்பு கால அறிவிப்பின்போது உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத சுமார் 9000 முப்படையின் வீரர்கள் சட்டரீதியாக சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்