மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/19/2017 12:57:16 PM ஓமந்தையிலுள்ள முகாம் அகற்றப்படவில்லை - இராணுவப் பேச்சாளர்

ஓமந்தையிலுள்ள முகாம் அகற்றப்படவில்லை - இராணுவப் பேச்சாளர்

[2017/01/19]

இலங்கை இராணுவம் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த பொது மக்களின் பெரும் பகுதியான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளினை முன்னெடுத்துள்ளனர். இதன் பிரகாரம் மொத்தம் 16 ஏக்கர் காணிகளை வவுனியா மாவட்ட செயலாளரிடம் அண்மையில் (ஜனவரி. 17) கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓமந்தை இராணுவ முகாமின் வழமையான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதோடு, குறித்த முகாம் முற்றாக அகற்றப்படமாட்டது என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை இராணுவத்தினரால் ஏ-9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மொத்தம் 16 ஏக்கர் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளளிப்பதட்காக வவுனியா அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணிகளை கையளிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் 563 பிரிகேட் கட்டளைத்தளபதி ஆகியோர் முன்னிலையில் அண்மையில் (ஜனவரி. 17) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்