மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/26/2017 1:15:55 PM உயிரிழந்த சக படைவீரரின் குடும்பத்திற்கான புதிய வீடு இராணுவத்தினரால் நிர்மாணிப்பு

உயிரிழந்த சக படைவீரரின் குடும்பத்திற்கான புதிய வீடு இராணுவத்தினரால் நிர்மாணிப்பு

[2017/01/26]

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையத்தில் 62வது பிரிவில் சேவையாற்றும் 17வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த படை வீரர்கள், ஆர்ய பவுண்டேஷன் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையுடன் இணைந்து உயிரிழந்த சக படைவீரரின் குடும்பத்திற்காக நிர்மாணித்த புதிய வீட்டினை கையளிக்கும் நிகழ்வு நேற்று (ஜனவரி.25) இடம்பெற்றது. குறித்த படை வீரர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததையடுத்து அவரது மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தார்.

மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்துவந்த இப்படைவீரரின் குடும்பத்துக்கு பொருத்தமான வதிவிடம் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் திட்டம் இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. நீர் தாங்கி, வீட்டுத் தளபாடங்கள், ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள், பாடசாலை உபகரணங்கள், மற்றும் வீட்டிற்கு அவசியமான இதர பொருட்கள் என்பன மனை குடிபுகுதலின் போது வழங்கி வைக்கப்பட்டன. மேலும் ஆங்கில கற்கை நெறியினை பயிலும் ஆர்வத்துடன் இருந்த குறித்த படைவீரரின் மூத்த பிள்ளைக்கு ரூபா. 12000/= நிதிக்கொடையும் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மகா சங்க நாயக்க தேரர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் உயிரிழந்த படைவீரரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்