மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/28/2017 10:49:31 PM தாமரைத் தடாகத்தில் இராணுவ வீர வீராங்கனைகளின் வர்ணக்காட்சிகள்

தாமரைத் தடாகத்தில் இராணுவ வீர வீராங்கனைகளின் வர்ணக்காட்சிகள்

[2017/01/28]

இலங்கை இராணுவம் அண்மையில் ( ஜனவரி .27) தாமரைத்தடாகத்தில் இராணுவ வீர வீராங்கனைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்திருந்த “கலர் நைய்ட் – 2016” நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ. தயாசிறி ஜயசேகர அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது பாதுகாப்பு செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

குறித்த இந்நிகழ்வின்போது 2015 மற்றும் 2016 ஆண்டு தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாதுகாப்பு சேவைகள், மற்றும் படைப்பிரிவு களுக்கிடையேயான சிறந்த படைப்புகளை வெளிப்படுத்திய இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இந்நிகழ்வின்போது 34 விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய 100 வீர வீராங்கனைகள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

2015 மற்றும் 2016 ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளாக முறையே வரண்ட் ஒபிசர் II எஸ். பிரசன்ன மற்றும் கோபல் எம் பீ பத்திரன ஆகியோரும் பிரைவட் ஐ ஈ சேனநாயக மற்றும் கோபல் என் ஜீ ராஜசேகர ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு ஏ பி ஜீ கித்சிறி, சிரேஷ்ட பாதுக்காப்பு அதிகாரிகள், முப்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், உட்பட அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீர வீராங்கனைகள் கலந்து சிறப்பித்தனர்.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்