மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/30/2017 11:54:29 AM வண. தம்மாராம தேரரருக்கு பட்டம் வழங்கிவைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

வண. தம்மாராம தேரரருக்கு பட்டம் வழங்கிவைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/01/30]

களுத்துறை பலதோட்ட ஸ்ரீ கங்காராம விகாரையில் நேற்று (ஜனவரி. 29) இடம்பெற்ற களுத்துறை மாவட்டத்திற்கான பிரதி பிரதம சங்கநாயக்க தேரராக வணக்கத்துக்குரிய துவகொட தம்மாராம தேரரருக்கு பட்டம் வழங்கிவைக்கும் விஷேட நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து கொண்டார். குறித்த இப்பட்டம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே கல்யாணி சமகி சங்க சபையின் ஷ்யாமாபாலி பீடத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த இந் நிகழ்வின் சமய அனுஷ்டானங்கள் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி பெல்லன்வில விமலரத்ன தேரரினால் நிகழ்த்தப்பட்டது. மேலும் இராஜாங்க அமைச்சர் ‘விஜிநிபத’த்தை வணக்கத்துக்குரிய தேரருக்கு வழங்கி வைத்ததுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘சக்மன் மழுவ’ என அழைக்கப்படும் தியான நடைபாதையையும் திறந்து வைத்தார்.

இங்கு உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் வணக்கத்துக்குரிய தேரருக்கு இப்பட்டத்தை அளிப்பதன் மூலம் மகிழ்ச்சியடைவதாகவும் கடந்த சில தசாப்தங்களாக வணக்கத்துக்குரிய தேரர் நாட்டுக்கும் புத்த சாசனத்துக்கும் அளப்பரிய சேவையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்வில் மகா சங்க நாயக்க உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்