மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/31/2017 2:19:36 PM இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணிக்கு ஜனாதிபதி அதிகாரக் கோல் வழங்கி வைப்பு

இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணிக்கு ஜனாதிபதி அதிகாரக் கோல் வழங்கி வைப்பு

[2017/01/31]

இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படையணியினருக்கு ஜனாதிபதி அதிகாரக்கோல் மற்றும் படையணி அதிகாரக்கோல் என்பனவற்றை வழங்கி வைக்கும் விஷேட வைபவம் அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் படைத்தலைமையகத்தில் நேற்று (ஜனவரி.30) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

வர்ணப்பட்டிகைக்கு சமனான கௌரவத்துடன் கூடிய ஜனாதிபதி அதிகாரக்கோல் இப்படையணிக்கு அளிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும். மேலும், இது தாய்நாட்டுக்கும் படையணிக்கும் வீரர்கள் வழங்கிய உண்மையான பற்றுறுதியை பிரதிபலிக்கும் தனித்துவமான முத்திரையாகும்,

குறித்த இந்நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதயடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் ஜனாதிபதி இப்படையணியின் அதிகாரக்கோல் தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தை வாசித்தார்.

மேலும், ஜனாதிபதி அங்கு நிர்மாணிக்கப்பட்ட புதிய நூலக கட்டிடத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இராணுவ வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடமானது, அண்மையில் சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற நான்காவது ஹொல்சிம் சர்வதேச சூழல் நேய கட்டிடங்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பீல்ட் மாஷல் சரத் பொன்சேக்கா, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா , சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்