மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/2/2017 1:14:08 PM கொழும்பு பிராந்திய பாடசாலைகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட டெங்கு ஒழிப்பு திட்டம்

கொழும்பு பிராந்திய பாடசாலைகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட டெங்கு ஒழிப்பு திட்டம்

[2017/02/02]

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விஷேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முப்பட்டயினரின் பூரண ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக இனங்காணப்பட்ட பிரதேசங்களின் 60 பாடசாலைகளை உள்ளடக்கியதாக மேற்படி முன்னெச்சரிக்கைத் திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

கொலன்னாவ, பத்தரமுல்ல, கடுவெல, புறக்கோட்டை, கங்வெல்ல, ஹோமாகம, கஹடுடுவ, மற்றும் பாதுக்க ஆகிய எட்டு வலய பாடசாலைகளுக்கு விஜயம் செய்த இராணுவத்தினர் அங்கு சுத்தப்படுத்தும் நடடிக்கைகளில் ஈடுபட்டதுடன் டெங்கு பரவுவதற்கு சாத்தியமான இடங்களையும் இல்லாதொழித்தனர்.

கொலன்னாவ வலய பாடசாலைகளில் விஜயபா இலேசாயுத படையணியின் 12 மற்றும் 11 பிரிவினரும் பத்தரமுல்ல, கடுவெல, புறக்கோட்டை வலய பாடசாலைகளில் இலங்கை இலேசாயுத படையணியின் 9வது படைப்பிரிவும் மேற்படி செயற்றிட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கங்வெல்ல, ஹோமாகம, கஹடுடுவ, மற்றும் பாதுக்க வலய பாடசாலைகளில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் 10வது படையணியினர் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பபட்ட அதேவேளை, இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்கள் 13 பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இவற்றுக்கு மேலதிகமாக மேற்கு பாதுகாப்பு படை தலைமையாகத்தின் படையினர், 14வது பிரிவின் தலைமையகம், இலங்கை இலேசாயுத படையின் 8வது படையணி இலங்கை இராணுவத்தின் பெண்கள் படையணி, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலைகளின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பங்கெடுத்தனர்.

தொடரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இப்பிராந்தியங்களில் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துக் காணப்படுவதனால் அவற்றை தடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை இராணுவத்தினரால் இதுபோன்ற விஷேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் யாழ் குடா நாட்டிலுள்ள பல பாடசாலைகளிலும் முன்னேடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

பாதுகாப்பு அமைச்சினால் டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுப்பு

இராணுத்தினரால் யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்