மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/6/2017 2:41:58 PM பாதுகாப்பு அமைச்சில் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு

பாதுகாப்பு அமைச்சில் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு

[2017/02/06]

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் இன்று (பெப்ரவரி .06) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான வாரத்தினை முன்னிட்டு அரசினால் எற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றது.

முப்படைகளைசேர்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் குழுவினரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த நடை பயணம் அமைச்சின் வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு காலி முகத்திடல் சுற்று வட்டதினூடாக மீண்டும் அமைச்சின் வளாகத்திற்குள் வருகை தந்ததுடன் நிறைவுற்றது.

நடை பயண நிறைவை அடுத்து இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் அமைச்சின் வளாகத்தின் முன் ஒன்று கூடினர். இதன்போது அமைச்சின் செயலாளர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது பாதுகாப்பு செயலாளர் இங்கு உரையாற்றுகையில் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் சத்துனவு ஆகியவற்றின் மூலம் முறையான உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது முக்கியமானது என்றார். வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால் மக்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் ஆரோக்கியமான வாழ்வுக்கு முறையான உடற்பயிற்சி மிகவும் அவசியம் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அரச ஊழியர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை முறையாக பேணுவதற்கான முக்கியத்துவத்தை உணர்த்துமுகமாக அரசினால் இவ்வாறான நிகழ்வுகளை வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படையினர், மற்றும் அமைச்சின் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்