மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/6/2017 4:50:31 PM மேலும் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்துவைப்பு

மேலும் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்துவைப்பு

[2017/02/06]

இலங்கை கடற்படையினரால் தெல்நேகமயின் தம்புத்தேகம மற்றும் மொரகொல்லாகம ரஜமஹா விகாரை ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட மேலும் இரண்டு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேற்று (பெப்ரவரி .05) திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்கள் மூலம் தெல்நேகம கிராமத்தில் 400 குடும்பங்களும், மொரகொல்லாகம ரஜமஹா விகாரைகுட்பட்ட கிராமத்தில் 350 குடும்பங்களும் சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இக் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதியுதவியியுடன் நிறுவப்பட்டு வருகின்றது. மேலும், நாடு பூராகவும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 126 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியதன் மூலம் சுமார் 55,410 குடுமபங்களும் மற்றும் 45,100 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர்.

இதேவேளை, மேலும் ஆறு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஹொறவபொதான சுவர்ணதிலகராமய கோயில், ரத்மல்கஹவெவ ஹன்தகல ரஜமஹா விஹாரை, கெப்பட்டிகொல்லாவ ஈதலவிட்டாவ புறன விஹாரை, ஹொறவபொதான புஹுல்வெவ ரலபாணவ ஸ்ரீ சுஜாதாராம விஹாரை, கல்னேவ ஒத்தபஹுவ கிராமம் மற்றும் பொல்பிதிகம சேருகஸ்யாய கிராமம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்தம் சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக மாற்றும் பிரிவிற்கு அல்ட்ரா குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தினூடாக நாளொன்றுக்கு பத்து தொன் எடையுள்ள சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கும் திறன் கொண்டதாக காணப்படுகின்றது. குறித்த நிலையத்தின் சந்தைப்பெறுமதி 4 - 8 மில்லியன் கொண்டதாகவும் அவற்றினை இரண்டு மில்லியன் செலவில் இலங்கை கடற்படையினரால் நிறுவ முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்நிலையத்தை நிறுவியதன் மூலம் உயர்தர மருத்துவ அளவு கருவி மயமாக்கள் சங்கத்திடமிருந்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்