மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/7/2017 1:05:14 PM தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் விஷேட கலந்துரையாடல்

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் விஷேட கலந்துரையாடல்

[2017/02/07]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றினால் கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் நேற்று (பெப்ரவரி .06) கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு “சார்க் இடையூறுகள் மற்றும் அதன் முன்னோக்கிய பயணமும்” என்ற தலைப்பில் தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

மேலும் இக் கலந்துரையாடலின்போது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செயிட் ஷகீல் ஹுசைன், முன்னாள் சீனா நாட்டுக்கான தூதுவர் மற்றும் நியூயோர்க் மற்றும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி திரு நிஹால் ரொட்ரிகோ, பேராசிரியர் மற்றும் பகுதித்தலைவர், அரச திணைக்கள சட்டம் மற்றும் பொது நிர்வாகம், சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதநேய பாடசாலை, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப தேசிய பல்கலைகழகம் இஸ்லாமாபாத், வைத்திய கலாநிதி செயிட் றிபாட் ஹுசைன், தலைவர், பாத்பைன்டர் குரூப், இனை தலைர், கராச்சி சபையின் வெளி உறவுகள் -கராச்சி திரு. இக்ராம் சேஹ்கள் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு அசங்க அபேகுனசேகர ஆகியோர் பங்குபற்றினர்.

குறித்த நிகழ்வில், சார்க் விடயங்களை உள்ளடக்கி இந்துநதி நீர் ஓப்பந்தம், பிராந்திய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடிய காரணிகள் மற்றும் தென் ஆசியாவிற்கான பூலோக சவால்கள் ஆகிய முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் பாதுகாப்பு அமைச்சு சார்பில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளை முன்னெடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சிந்தனைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாதுகாப்பு மையமானது தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு சம்பந்தமான தலைப்புகளை உரிய நேரத்தில் கலந்துரையாடுவதற்கும் மற்றும் அறிவுரீதியான விவாதங்களை மேட்கொள்வதற்குமான வசதியினை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

முப்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள், தூதரக உறுப்பினர்கள் மற்றும் விஷேட அழைப்பின் பேரில் சமுகமளித்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்