மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/8/2017 3:46:08 PM டில்மா தேயிலை கம்பனியால் நடத்தப்படும் கட்டுபெத்த நகர்சார் வன பூங்கா ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

டில்மா தேயிலை கம்பனியால் நடத்தப்படும் கட்டுபெத்த நகர்சார் வன பூங்கா ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

[2017/02/08]

டில்மா தேயிலை கம்பனியால் கட்டுபெத்த பிரதேசத்தில் நடத்தப்படும் நகர்சார் வன பூங்கா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் இன்று (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

உயிர் பன்மைத்துவம் தொடர்பான அறிவை வழங்கும், இயற்கையின் வனப்புடன், மனதை ஆறுதல்படுத்த உதவக்கூடியவாறு டில்மா உரிமையாளர் மெரில் ஜே.பெர்ணான்டோ அவர்களது எண்ணக்கருவுக்கமைய 250 வர்த்தக பெறுமானத்துடன் இந்த நகர்சார் வன பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

09 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள இப்பூங்காவில் 500 க்கு அதிகமான பாரம்பரிய விவசாய முறைகளை வெளிப்படுத்தும் வாயக்;கால்கள், சேனைப்பயிர்ச்செய்கை மற்றும் பழப்பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பத்தாயிரம் பழமரக் கன்றுகளை நடுகைசெய்யும் திட்டமும் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன, டில்மா நிறுவன தலைவர் மெரில் ஜே பெர்ணான்டோ, பணிப்பாளர் டில்ஹான் சீ. பெர்ணான்டோ உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நகர்சார் வன பூங்காவை திறந்து வைத்த பின்னர் டில்மா நிறுவனத்தினால் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக நடத்தப்பட்டுவரும் சிறுவர் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு தங்கியுள்ள பிள்ளைகளுடன் உரையாடியதுடன் பிள்ளைகளுடன் இணைந்து பாடலிசைத்து அப்பிள்ளைகளை மகிழ்வூட்டினார்.

நன்றி : ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்