மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/13/2017 2:11:15 PM கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் செயற்கை கால்கள் வழங்கி வைப்பு.

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் செயற்கை கால்கள் வழங்கி வைப்பு.

[2017/02/09]

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் குண்டசாலை மாற்று வலுவுள்ளோருக்கான நிலையத்தின் அனுசரணையுடன் அங்கவீனமுற்ற குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்கும் மற்றுமொரு நிகழ்வு அண்மையில் (பெப்ரவரி. 07) கிளிநொச்சி ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த இந்நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையாகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்றது.

இராணுவத்தினரின் மனிதாபிமான சேவைகளை வெளிப்படுத்தும் வகையில் ரூபாய் 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு தொகை செயற்கை கால்கள் அங்கவீனமுற்ற பொதுமக்கள் முப்பது பேருக்கு இந்நிகழ்வின்போது வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சமூக சேவை திட்டத்திற்கான பயனாளிகள், குறித்த பிரதேசத்தில் கடைமையாற்றும் அரச அதிகாரிகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களினால் அடையாளங் காணப்பட்டதுடன் இவர்களுக்கான செயற்கை கால்கள் வைத்திய அதிகாரியின் ஆலோசனைகளுக்கமைய வழங்கிவைக்கப்பட்டன

இந்நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம் 65வது, 57 வது பிரிவுளின் கட்டளைத்தளபதிகள், கிளிநொச்சி மாவட்ட வைத்திய அதிகாரி , சிரேஷ்ட அரச, இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்