மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/15/2017 10:43:46 AM பாகிஸ்தானில் இடம்பெறும் ‘அமான் 2017’ நிகழ்வில் இலங்கை கடற்படை பங்கேற்பு

பாகிஸ்தானில் இடம்பெறும் ‘அமான் 2017’ நிகழ்வில் இலங்கை கடற்படை பங்கேற்பு

[2017/02/14]

இலங்கை உட்பட 37 நாடுகள் பங்குபற்றும் சர்வதேச கடற்படை பயிற்சி ‘அமான் 2017’ பாகிஸ்தானில் இடம்பெற்றுவருகின்றது. பாகிஸ்தான் கடற்படையினால் இக்கடல்சார் ஒத்திகை பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சர்வதேச கடற்படை பயிற்சி ‘அமான் 2017’ நிகழ்வின் இடையே இடம்பெறும் ஏழாவது சர்வதேச கடல்சார் மாநாடு மற்றும் சர்வதேச பேன்ட் வாத்திய காட்சி நிகழ்வு மற்றும் கடல்சார் தீவிரவாத தடுப்பு ஒத்திகை காட்சி என்பனவற்றில் பிரதம அதிதியாக இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கலந்து சிறப்பித்ததாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இந்நிகவில் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் முஹம்மது சகாவுல்லாவும் கலந்துகொண்டார். இதன்போது இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் முப்படைகளின் பேன்ட் வாத்தியக் குழுவினர் பாரம்பரிய மற்றும் இராணுவ மரபுகளில் அமைந்த இன்னிசைகளை பார்வையாளர்கள் மத்தியில் இசைத்தனர்.

மேலும், குறித்த இப்பயிற்சியில் கலந்து கொள்ளவதற்காக இலங்கை கடற்படையின் கரையோர ரோந்துக் கப்பலான எஸ்எல்என்எஸ் சமுத்ரா 186 கடற்படை வீரர்களுடன் இம்மாதம் 03ம் திகதி பாகிஸ்தானை நோக்கி பயணித்தது. இதேவேளை, மாலை தீவு தேசிய பாதுகாப்பு படையின் எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்றும் இவர்களுடன் பயணித்தது.
சர்வதேச கடல்சார் ஒத்திகைப் பயிற்சி ‘அமான் 2017’ பாகிஸ்தானிய அரேபிய கடற்பிராந்தியத்தில் இம்மாதம் 10ம் திகதி முதல் 14ம் திகதி வரை இடம்பெறுகின்ற இதேவேளை, 7வது சர்வதேச கடல்சார் மாநாடு கராச்சி பஹ்ரியா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 11ம் திகதி முதல் 13ம் திகதி வரை இடம்பெறுகின்றது.

விஷேட போர்களில் நவீன போர் உத்திகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் கடற்படையின் விஷேட அதிரடிப்படை வெளிநாட்டு விஷேட அதிரடிப்படைகளுடன் இணைந்து வழமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது கடல்சார் தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் பல ஒத்திகை பயிற்சிகள் அவர்களிடையே இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருமளவிலான கடற்படை பிரதிநிதிகள், அவதானிப்பாளர்கள், இராஜதந்திரிகள் குழு மற்றும் பாகிஸ்தானிய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு மேற்படி நிகழ்வுகளைப் பார்வையிட்டனர்.

 

 

 

 

 

 

தொடர்பான செய்திகள் >>

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரா பாகிஸ்தான் “அமான்” கடற்படை பயிற்சியில்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்