மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/17/2017 4:29:57 PM கடற்படையின் அமான் 2017 கூட்டுப் பயிற்சி நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

கடற்படையின் அமான் 2017 கூட்டுப் பயிற்சி நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

[2017/02/17]

பாகிஸ்தான் கராச்சியில் வெற்றிகரமாக நிறைவுபெற்ற அமான்-2017 கூட்டுப் பயிற்சியின் இறுதி நிகழ்வுகள் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ. நவாஸ் சரீப் அவர்களின் தலைமையில் நேற்று (பெப்ரவரி .14) இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வு இலங்கை உட்பட 36 நாடுகளின் பங்குபற்றளுடன் இம்மாதம் 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந் நிகழ்வில் கடற்படைதளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களும் கலந்து கொண்டார்.

இதேவேளை, இப்பயிற்சி கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் பாகிஸ்தான் கடற்படையினால் ஜந்தாவது தடைவையாக ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும், குறித்த இக் கடல்சார் ஒத்திகை பயிற்சியானது 'இந்து சமுத்திர பிராந்தியத்தில் மூலோபாய நிலை-2030, அதற்கப்பால் எழுகின்ற சவால்கள் மற்றும் உத்திகள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளது. இப்பயிற்சிக்கு இலங்கை கடற்படையின் கரையோர ரோந்துக் கப்பலான எஸ்எல்என்எஸ் சமுத்ராவும் சென்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்