மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/21/2017 1:17:44 PM டயர் மீள்உற்பத்தி தொழிற்சாலை திறந்துவைப்பு

டயர் மீள்உற்பத்தி தொழிற்சாலை திறந்துவைப்பு

[2017/02/21]

ஹொரண தொம்பகொட பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் இராணுவ வாகனங்களுக்கு மீள்பாவனைக்கு உட்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட டயர் தொழிற்சாலையினை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் நேற்று (பெப்ரவரி .20) வைபவ ரீதியாக திறந்துவைத்தார். இராணுவத்தின் நிதியுதவியின் மூலம் நிறுவப்பட்ட குறித்த தொழிற்சாலையில் வருடாந்தம் சுமார் 8800 மேற்பட்ட டயர்களை மீள்உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த நிலையத்தினூடாக நாள் ஒன்றுக்கு 36 டயர்களை மீள்உற்பத்தி செய்ய முடியும். மேலும் இச்செயற்பாடுகளுக்கு 6 இராணுவ அதிகாரிகள் மற்றும் 300 படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதேவேளை, தொம்பகொட தொழிற்சாலை மற்றும் கொஸ்கம இராணுவ கைத்தொழில் பட்டறை ஆகியன இராணுவ வாகனங்களின் வன்பொருள், பர்ராக் உபகரணங்கள், இயந்திர உபகரணங்கள், மற்றும் பல்வேறு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பிரதம பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்