மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/24/2017 10:12:58 AM நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென திறந்து வைப்பு

நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென திறந்து வைப்பு

[2017/02/24]

இலங்கை இராணுவத்தினரால் வக் ஓயாவிற்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்ட நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென அண்மையில் (பெப்ரவரி, 22) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. சுமார் 55 அடி நீளமும் 14 அடி அகலமும் கொண்ட குறித்த இப்பாலத்தை நிர்மாணிப்பதற்கு வெறும் 28 நாட்கள் மாத்திரமே சென்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீதாவக்க பிரதேச செயலாளரினால் இலங்கை இராணுவத்தினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் இப்பாலத்தின் நிர்மாணப்பணிகள் யாவும் மேற்கு பாதுகாப்பு படை தலைமைத்தின் இராணுவ பொறியியல் படைப்பிரிவின் நிபுணத்துவம் வாய்ந்த குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பொருட்கள் அரச முகவர் நிலையம் ஒன்றினால் வழங்கி வைக்கப்பட்டது.

இப்புதிய பாலத்தின் மூலம் கலோக்கல மற்றும் லபுகம பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. இதற்கு முன்னர் அங்கு மரத்தினாலான பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்திருந்தது.

குறித்த இவ்வைபவத்தில் மேற்கு பாதுகாப்பு படை தலைமைத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, பிரதம பொறியியலாளர் மேஜர் ஜெனரல் தனஜித் கருணாரத்ன, சீதாவக்க பிரதேச செயலாளர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்