மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/27/2017 4:50:40 PM சட்டவிரோதமான குடியேற்றக்காரர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான குடியேற்றக்காரர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

[2017/02/25]

நீர்கொழும்பு குட்டடுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு குடிபெயர முயற்சிசெய்த 18 இலங்கையர்களை இலங்கை கடற்படை மற்றும் பொலீசார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது அண்மையில் (பெப்ரவரி .23) கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆள்கடத்தல் காரர்களின் பொய்யான தகவல்களுக்கு ஏற்ப ஆபத்தான கடல்வழி ஊடாக இவ்வாரான செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபடுவதை தவித்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் இலங்கை கடற்படையினர் கேட்டுக்கொள்கின்றனர். அத்துடன் இவ்வாறான முயற்சிகள் இறுதியில் சிறை வாழ்க்கையிலேயே முடிவுறும் என்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு குடிபெயர முயற்சிப்போரை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படை புலனாய்வுத்துறையில் வலுவான வலையமைப்பு காணப்படுகின்றதாகவும் கடற்படையினரால் இது தொடர்பாக தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்