மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/1/2017 1:43:17 PM இராணுவத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பதவி உயர்வு

இராணுவத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பதவி உயர்வு

[2017/03/01]

கிரிகெட் விளையாட்டு துறையில் நாட்டுக்கு பெருமை ஈட்டித்தந்த இரண்டு இராணுவ வீரர்களின் விளையாட்டு திறமையினை பாராட்டும் வகையில் இலங்கை இராணுவம் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியள்ளது.

இலங்கை தேசிய கிரிகெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட குறித்த வீரர்கள் இருவரும் அண்மையில் அவுஸ்திரேலியாவில் அந் நாட்டிற்கு எதிராக இடம்பெற்ற டீ – 20 கிரிகெட் சுற்றுப்போட்டியில் தமது திறமைகளை வெளிக்காட்டியதை கருத்தில் கொண்டு அவர்களுக்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் சார்ஜென்ட் அசேல குணரத்ன வரன்ட் ஒபீசர்- II (WO - II) தரத்திற்கும் மற்றும் வரன்ட் ஒபீசர்- II சீக்குகே பிரசன்ன வரன்ட் ஒபீசர்- I (WO - I) தரத்திற்கும் 28ம் திகதி (பெப்ரவரி- 2017) முதல் செயற்படும் வண்ணம் தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்