மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/5/2017 10:29:09 AM ரத்மலான விமானப்படைத் தள கண்காட்சி நிகழ்விற்கு ஜனாதிபதி விஜயம்.

ரத்மலான விமானப்படைத் தள கண்காட்சி நிகழ்விற்கு ஜனாதிபதி விஜயம்.

[2017/03/05]

இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வினைப் பார்வையிடுவதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (மார்ச், 04) அங்கு விஜயம் செய்தார்.

ரத்மலான விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியினை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி விமானப்படை முகாமைத்துவ சபை அதிகாரிகள் சகிதம் வரவேற்றார்.

மேலும், ஜனாதிபதி அவர்கள், இக்கண்காட்சி இடம்பெற்ற வளாகத்தினை சுற்றிப்பார்வையிட்டதுடன் விமான சாகசங்கள், பரசூட் சாகசங்கள், தாக்குதல் நடவடிக்கைகளின் நகல் நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் என்பனவற்றையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கத.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்