மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/6/2017 1:07:07 PM பாடசாலைகளில் இராணுவத்தினரால் நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகள்

பாடசாலைகளில் இராணுவத்தினரால் நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகள்

[2017/03/06]

கெகிராவ சுமண வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி இலங்கை இராணுவத்தினரால் இரு குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் நிறுவப்பட்டுள்ளன. தூய குடிநீரின்மை காரணமாக சிறுநீரக நோய்கள் பரவிக் காணப்படும் குறித்த இப்பிரதேசத்தில் அதனை தடுக்கும் வகையில் ஹபரண இனாமலுவவில் அமைந்திருக்கும் 53வது பிரிவின் தலைமகத்தினால் மேற்படி சமூக நலத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இராணுவத்தினர் இவ்வாறான பல குடிநீர் சுத்த்திகரிக்கும் தொகுதிகளை இப்பிராந்திய பாடசாலைகளிடையே விநியோகித்துள்ளனர். இவ்வாறு இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மூலம் ஹபறன, கலேவெல, சீகிரிய மற்றும் நாவுல பிரதேச மாணவ மாணவிகள் நன்மையடைந்துள்ளனர்.

குறித்த இப்பாடசாலையில் நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகளுக்குமான நிதியனுசரணை கோயல் மகளிர் சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதுடன் அச்சங்கத்தினால் ஐந்து தொகுதிகள் கொண்ட கழிப்பறை கூடம் ஒன்றிற்கான நிதியனுசரணையும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 53வது பிரிவின் பொறியியல் சேவைகள் பிரிவினரினாலும் மேலும் இதர சேவைகள் பிரிவினராலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்