மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/13/2017 10:28:25 AM இலங்கை கடற்படையினால் இறங்குதுரை மற்றும் நல்லிணக்கபுர நீர் தங்கி திறப்பு

இலங்கை கடற்படையினால் இறங்குதுரை மற்றும் நல்லிணக்கபுர நீர் தங்கி திறப்பு

[2017/03/12]

அண்மையில் (மார்ச் .11) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவு இறங்குதுரை அரச உயர் அதிகாரிகள் சகிதம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள் கோலாகலமாக திறந்துவைத்தார்.

குறித்த இறங்குதுரை யாழ் மாவட்ட செயலகம் ஊடாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மதம் மத அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியுடன் வட மாகாண கௌரவ ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை கடற்படையினால் நிர்மாணிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், (2006) கடந்த வருடம் நவம்பர் மாதம் இதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இப்புதிய இறங்குதுரை மீன்பிடி இழுவைப் படகுகள், பயணிகள் படகு சவாரி மற்றும் கடல் ஆம்புலன்ஸ் ஆகியனவற்றை பாதுகாப்பாக செயற்படுத்தும் வகையில் 6 அடி தொடக்கம் 8 அடி ஆழம் உடையதாக காணப்படுகின்றது. இத்திட்டத்தின் முதற்கட்டம் 101 அடி நீளம் மற்றும் 31 அகலம் கொண்டு பரந்த இறங்குதுரையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளத.

இதேவேளை, கீரிமலை வீடுத்திட்ட “நல்லிணக்கபுரம்” எனும் பெயரில் சுத்திகரிக்கப்பட்ட தூய குடி நீர் விநியோகிப்பதற்கான சுத்திகரிப்பு நிலையம் கடற்படை தளபதியினால் நேற்று கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. 60,000 லீட்டார் கொள்ளளவு கொண்ட குறித்த நீர் சுத்திகரிப்பு நிலைய நீர் தங்கியினூடாக நல்லிணக்கபுரத்தின் 50 குடும்பங்கள் தமது நாளாந்த தேவைகளுக்கு ஏற்ப தூய குடி நீரை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் அரச உயர் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டனர.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்