மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/15/2017 8:48:50 AM “விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அனுசரணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட கலந்துரையாடல்

“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அனுசரணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட கலந்துரையாடல்

[2017/03/14]

“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அரச மற்றும் தனியார் பிரதிநிதிகளின் அனுசரனையினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தலைமையில் இன்று (மார்ச் .14) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு. ஏஜீபீ கித்சிறி அவர்களும் வருகை தந்திருந்தார். “விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரணவிரு சேவா அதிகாரசபை ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

நடைமுறைப்படுத்தப்படவுள்ள குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பாக வருகை தந்திருந்த பிரமுகர்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட காட்சிப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், மனிதாபிமான நடவடிக்கை நிறைவுற்று எட்டு ஆண்டுகள் கடந்துள்ளபோதும் நாம் இன்று அனுபவிக்கின்ற அமைதியான வாழ்க்கைக்காக அன்றைய இருண்ட யுகத்தில் பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட முப்படை வீரர்களின் நினைவுகள் எம்மை விட்டு சிறிது சிறிதாக விலகிச்செல்கின்றன எனவும் 3000ற்கு மேற்பட்ட படைவீரர்களுக்கு வீடுகளின் தேவை நிலவுவதாகவும் அவற்றை பெற்றுக்கொடுப்பது எமது பிரதான கடமையாகும் எனவும் குறிப்பிட்டார். இத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அவர்களும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தனியார்துறையினரையும் இணைத்துக்கொண்டு முன்னெடுக்குமாறு தனக்கு அறிவுரை வழங்கியதாவும் தெரிவித்தார். மேலும் அவர் உயர்ந்த இலட்சியத்துடன் ஆரம்பிக்கபட்ட இத்திட்டம் வெற்றியடைய அனைத்து தரப்பினரும் தமது ஆக்கபூர்வமமான ஒத்துழைப்புக்களை நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இக்கலந்துரையாடலின்போது வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் முகாமையாளர் திரு. டீஎம்ஜேகே ரத்நாயக அவர்கள் “விருசுமிதுரு” வீட்டுத்திட்டத்திற்காக 6 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையினை நன்கொடையாக அமைச்சரிடம் வழங்கிவைத்தார். குறித்த காசோலையினை ரணவிரு சேவா அதிகாரசபை தலைவி அனோமா பொன்சேகா விடம் அமைச்சரவர்கள் கையளித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வீட்டுத்திட்டமானது யுத்தவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் ஆகியோருக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாகும். இப் புதிய வீடு ஒவ்வொன்றும் 816 சதுர நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இவ்வீட்டு நிர்மாணிப்புக்காக சுமார் 1.6 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது.

இத்திட்டத்தின்கீழ் சுமார் 2340 மில்லியன் ரூபா செலவில் 1950 புதிய வீடுகளும் மற்றும் சுமார் 850 மில்லியன் ரூபா செலவில் 1700 பகுதியளவிலான வீடுகளுமாக சுமார் 3190 மில்லியன் ரூபா தொகையில் மொத்தமாக 3650 வீடுகள் நிமாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்