மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/20/2017 1:05:59 PM ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

[2017/03/18]

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 எனும் கருத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட பல சமூக சேவை நிகழ்வுகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாக இன்று (மார்ச் .17) நிறைவுபெற்றது.

குறித்த நிகழ்வுகள் இம்மாதம் .07ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படை கப்பலான “போல் ரிவர்” எனும் கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்களால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் இலங்கை கடற்படை பிரதம பிரதானி ரியல் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் விஷேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

குறித்த நிகழ்வு இந்து-ஆசியா-பசுபிக் பிராந்தியத்தில் இடம்பெறுகின்ற அனர்த்த நிலைமைகளின்போது தேவைப்படுகின்ற உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருத்தல், அத்துடன் மருத்துவம் மற்றும் பலதரப்பட்ட மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பிராந்திய ஒருங்கிணைப்பினை மேம்படுதுவது இதன் நோக்கமாகும்.

மேலும், குறித்த கப்பலில் வருகைதந்த கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படை வீரர்களுடன் இணைந்து திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகலான “பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தலில் பெண்களின் வகிபாகம்” எனும் கருப்பொருளிலான நிகழ்ச்ச்சி உட்பட ஹம்பாந்தோட்ட பிரதேச பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் புனரமைப்பு செய்தல், தொழில் நிபுணர்களின் நிபுணத்துவ பரிமாற்றம், சமூக உறவுத் திட்டங்கள், போன்ற பல நிகழ்ச்சிகளை ஆர்வத்துட திறம்பட குறித்த வீரர்கள் செயற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 இன் இருதி நிகழ்வின்போது ஹம்பாந்தோட்ட கடற்கரை பூங்கா உட்பட பல இடங்களில் இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையினர் இணைந்து வழங்கிய பேன்ட் வாத்தியக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகளில் பெரும்தொகையினர் கலந்து கொண்டனர்.

மேலும், இங்கு உரை நிகழ்த்திய கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளரும் இலங்கை கடற்படையின் பிரதம பிரதானியுமான ரியல் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வின் பணிகளை திறம்பட வெற்றிகரமா செய்துமுடிக்க தமது ஒத்துழைப்பினை வழங்கிய அனைத்து கடற்படை வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

குறித்த கப்பல் பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வினை நிறைவு செய்த பின்னர் தமது ஏனைய பணிகளினை செயட்படுத்துவதற்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய துறைமுகங்களுக்கு புறப்பட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றத.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்