மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/28/2017 12:22:12 PM தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் “பெண்களும் பயங்கரவாதமும்” எனும் தலைப்பில் விஷேட விரிவுரை

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் “பெண்களும் பயங்கரவாதமும்” எனும் தலைப்பில் விஷேட விரிவுரை

[2017/03/26]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “பெண்களும் பயங்கரவாதமும்” - மூலோபாய இழப்பீட்டுக்கு மத்தியில் தந்திரோபாய வெற்றிகள்'” எனும் தலைப்பிலான விஷேட விரிவுரை ஒன்று தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் தலைமையகமான பத்தரமுல்ல சுஹுறுபாய கேட்போர் கூடத்தில் அண்மையில் (மார்ச் .24) இடம்பெற்றது

குறித்த இவ்விரிவுரை வரையறுக்கப்பட்ட பூகோள ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கல்வியியலாளருமான திருமதி மிச்சேல் புரூக்ஸ் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. அவர் தீவிர வாத எதிர்ப்பு நிபுணரும், பல்துறை அவசர கால நிலை நிபுணருமாவார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு அசங்க அபேகுனசேகர அவர்களினால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருமதி மிச்சேல் புரூக்ஸ் அவர்களினால் குறித்த விரிவுரை நிகழ்த்தப்பட்டது. விரிவுரையின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்களும் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜதந்திர அதிகாரிகள், இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் அதிகாரிகள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், விஷேட அதிதிகள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் வாசிக்க...

     
     

மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு>>

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த கலந்துரையாடல்

ஜப்பானிய கல்வியியலாளர் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் விஷேட விரிவுரை

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் விஷேட கலந்துரையாடல்

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல்

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் “பாதுகாப்பு நிலையம்” அங்குரார்பணம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்